Mar 12, 2013

பொங்கல் பய(ண)ம் – ரெண்டு பை ரெண்டு .










ஒரு வலியா திண்டுக்கல் போயி எறங்குனா ... மணி மூணே முக்கால் . எந்த பஸ்ஸ டார்கட் பண்ணி வந்தேனோ , அந்த பஸ் புறமுதுகு காட்டி என்னை தாண்டி போயிட்டுருக்கு . கொஞ்சம் வருத்தமா இருந்தாலும் , சரி பரவா ல்ல அதான் அம்மா ஆட்சியில சிறப்பு பேருந்துகள் தாறுமாறா விட்ருக்காங்களே ன்னு நம்பிகையோட நடந்தேன் .

நாலு அடி எடுத்து வைக்குரதுக்குள்ள, சிறப்பு பேருந்தும் என்னை கடந்து போகுது ... மூணு மணிநேர பயணப்பட வேண்டிய ஊருக்கு ரெண்டு நிமிசத்துல ரெண்டு பஸ்சு .. வெளங்கீரும் .
நிப்பாட்டி , ஏறக்கூடிய தூரம் தான் . ஆனா ஏறல . அதுக்கு நெறைய காரணம் ...
ஒன்னு , உள்ள உக்கார எடமில்ல , மூணுமணி நேரம் நின்னுட்டு தான் போகணும் . ரெண்டாவது பசி வயித்தகில்லுது . மூணாவது ரெம்ப முக்கியமானது ... சூச்சு போகணும் .

எச்சரிக்கை : பின் வருவது , கதைக்குள்ள கத மாதிரி , பய(ண) த்துக்குள்ள பய(ண)ம்  கண்புயூஸ் ஆகிடாதிங்க....

ஏற்கனவே ஒருமொற , இந்த மூணையும்  அலட்சியப்படுத்திட்டு பஸ் ஏறி நா பட்ட பாடு இருக்கே.. அய்யய்யோ ...சொல்ல முடியாது .

அவசர அவசரமா திருப்பூர் பஸ்ல இருந்து எறங்கி, ஓடிபோயி ரன்னிங்ல இருந்த  எங்க ஊர் போற பஸ்ல ஏறிட்டேன் . பஸ் போக ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே பசி உயிர் போகுது , திங்குறதுக்கு ஒண்ணுமில்ல , சரி யார்ட்டயாவது தண்ணியாவது ஓசில வாங்கி குடிக்கலாம்னு பாத்தா , ஏற்கனவே யூரின் டேங் நிரம்பி வழியபோற ஸ்டேஜ் . பஸ்ல கூட்டம் அள்ளுது.  ஏதாவது அசம்பாவிதம் நடந்து அசிங்கப்பட்டுடுவோமோ ன்னு பயம் வேற. ஒரு ஸ்டேஜுக்கு மேல அடக்க முடியல . கண்டக்டர் ட்ட போயி கேட்டேன் . ஏங்க , கொஞ்சம் நிப்பாட்டுங்களே, யூரின் போயிட்டு வந்துர்றேன் ...
முடியல ... ன்னேன் .
(மேலயும் கீழயும் பாத்துகிட்டே கண்டக்டர் சொன்னாரு ) அதெல்லாம் முடியாது...,  இது எக்ஸ்பிரஸ் வண்டி நீ நெனச்ச எடத்துல எல்லாம் நிக்காது . போயி உள்ள நில்லு.

(ங்கொய்யால நாப்பது கிலோமீட்டர் வேகத்துல, தகர டப்பாவா உருட்டி விட்ட மாதிரி போறதெல்லாம் எக்ஸ்ப்ரஸ் வண்டியா ..? ன்னு மனசுக்குள்ளே மொனங்கிகிட்டேன், பின்ன வாயி விட்டா சொல்ல முடியும் ).

பக்கத்துல இருந்தவரு சொன்னாரு , தம்பி போய் ட்ரைவர் ட்ட கேளுப்பா  நிப்பாட்டுவாரு ன்னு . சரின்னு , கூட்டத்துல புகுந்து பொறப்பட்டு டிரைவர்ட்ட போனா ... முன் சீட் புல்லா பொண்ணுங்க.
ஒருபக்கம் வெக்கமா இருக்கு’ ...இன்னொரு பக்கம் வெடிக்கிற மாதிரி இருக்கு’. வெக்கம் பாத்தா வேலைக்காகாது ன்னு முடிவு பண்ணி, ஒண்ணாப்பு படிக்கிற பையன் வாத்தியார்ட்ட ஒத்த வெரல் காட்டி நிக்குறமாதிரி நின்னேன் . டிரைவருக்கு மொதல்ல புரியல , மொறச்சு பாத்தாரு . அப்புறம் என்னோட பாடி லாங்க்வேஜ பாத்து யூரின் போகனுமான்னாரு ...சிரிச்சுகிட்டே . நல்ல வேல பஸ் நாறாமா காப்பதிட்டாரு . போயி டேங்கி ஓப்பன் பண்ணி திரும்பி பாத்தா , பத்து பதினஞ்சு பேரு திமு திமுன்னு வர்றாய்ங்க . அடப்பாவிங்களா ...?
என்ன ஒன்னு திரும்ப பஸ்ல ஏறுன பெறகு , பஸ் முழுக்க என்னயவே பாக்குற மாதிரி இருந்துச்சு .


அனுபவம் தந்த பாடத்துல , பஸ் ஏறல. மொதல்ல போயி  டேங்க காலி பண்ணிட்டு  பின்ன ஃபுல் பண்ணிகிட்டேன் . மறுபடி வந்து பஸ்சுக்கு தவமிருக்க ஆரம்பிச்சேன் . திருப்பூர்ல போட்ட பிளான் படி பஸ் டான்ட்ட விட்டு நூறடி தாண்டி வந்து நின்னேன் . அங்க என்ன மாதிரியே ப்பிளான் பண்ணிய நூறு பேரு நின்னாய்ங்க . வாழ்க வளமுடன் .  மணி நாளே கால் .

பொன்னமராவதி போற பஸ் வர்ற மாதிரியே தெரியல. மணி அஞ்சே கால் . வர பஸ் எல்லாம் தேனி , மதுர இந்த ரெண்டு ஊருக்கும் தான் வருது . என்னாடா இது , தமிழ்நாட்டு மக்களையெல்லாம் மதுரைக்கும் , தேனிக்கும் குடிபெயர்த்துட்டாங்களான்னு  கடுப்பாயிடுச்சு  .
மணி ஆறே கால் .... ஏழு மணி ... ஒரு வண்டியையும் காணும் . வேற வழியே இல்லாம,
நத்தம் வர போற ஒரு டவுன்பஸ்ல அடிச்சு புடிச்சு ஏறி உக்காந்துட்டேன் .

நத்தம் பஸ் ஸ்டான்ட் மணி எட்டர .
பொன்னமராவதி போக பஸ் எங்க வரும், எத்தன மணிக்கு வரும்னு கடகாரருட்ட கேட்டேன் .
“விசேச நாளுகள்ள டைம் லாம் கெடையாது , வந்தா ஏறிக்க . அதுவும் திண்டுக்கல்ல இருந்து வந்தாதான் உண்டு” .
நாசமா போச்சு . இதுக்கு திண்டுக்கல் லே நின்ருக்கலாம் . சத்தம்போட்டே சொல்லிட்டேன் .

அவரே மறுபடியும் சொன்னாரு , தம்பீஈ  ....அந்தப்பக்கம், சிங்கம்புணரி போறதுக்கு டவுன் பஸ் வரும் அதுல போனினா , அங்கருந்து பொன்னமராவதி க்கு பஸ் இருக்கு  போய் வேணா பாரு ன்னாரு . என்ன பாக்க பாவமா இருந்துருக்கு, அது அவரோட தொனில தெரிஞ்சுது .

சரின்னு போனா , அவர் சொன்ன மாதிரியே பஸ் நிக்குது. ஒரே சந்தோசம் நம்ம புடிச்ச ஏழரை காலைல ஏழரையோட  முடிஞ்சுடுச்சு போலன்னு  வேகமா போயி பஸ்ல ஏறுனேன் . பஸ் காலி . அப்பாடா கொஞ்சநேரம் தூங்கலாம் . ஒக்காந்துருந்த நாலு பேருக்கு டிக்கட் கொடுத்துட்டு இருந்த கண்டக்டர் திரும்பி பாத்து கேட்டாரு ....

எங்க போகனும் ....?

சிங்கம்புனரிங்க ....

இந்த பஸ் “ஊர் சுத்தி” , “மல சுத்தி” போகும் பரவாயில்லியா .....?

வேண்டாங்க எனக்கு “தல சுத்தி போகும்னு” ஏறுன வேகத்துல எறங்கிட்டேன் .

மறுபடியும் பஸ்சுக்காக தவம் ... ஒடம்புல  சொச்சமிருந்த சொரத்தும் போச்சு . பஸ் டான்ட்ல நிக்கவே முடியல . ஒரு ஓரமா பூட்டியிருந்த கடயா பாத்து  சம்மணக்கால் போட்டு ஒக்காந்து மிச்சமிருக்க பிஸ்கட்ட சாப்ட ஆரம்பிச்சுட்டேன் . போற வாரவங்கல்லாம் ஒரு மாதிரி பாத்துட்டு போனாய்ங்க .

பத்துமணி சுமாருக்கு சிங்கம்புணரிக்கு ஒரு டவுன் பஸ்சு வந்துச்சு . முண்டியடிச்சு போயி ஜன்னலோரமா எடம் புடிச்சு , டிக்கட் வாங்கி ஜன்னல்ல பாத்தா , பொன்னமராவதிக்கு போற டைரக்ட் பஸ் உள்ள வருது . நமக்கு சனிக்கிழமை சனி உச்சத்துல இருக்குபோல .என்ன பண்ணலாம் இறங்கிடலாமா , இல்ல இதுலேயே போகலாமா மனசுக்குள்ளே பட்டிமன்றம் போயிட்டு இருக்கு . முடிவு பண்றதுக்கு முன்னாடியே பஸ் முந்திடுச்சு .

சிங்கம்புணரி பஸ் ஸ்டான்ட் - மணி பதினொண்ணு சும்மா வெயிலு காட்டு காட்டுன்னு காட்டுது . முடியல . உடனடியா எதுனா தின்னாத்தான் மேற்கொண்டு நடக்கவே முடியும் . பக்கத்துல இருந்த ஒரு களப்பு கடைக்குள்ள நுழைஞ்சு ரெண்டு புளிச்சுப்போன தோசையும் , கெடாத கெட்டி சட்னியும் கொட்டிகிட்டு மறுபடியும் பஸ்டான்ட் . மறுபடியும் தவம் . ஜீன்சும் டீ சர்ட்டும் போட்ட பிச்சைகாரன் மாதிரி நின்னுட்டு இருந்தேன் .

பதினொன்ற மணிக்கு வந்துச்சு அடுத்த டவுன் பஸ் .தோச தந்த தெம்புல சீட்டு புடிச்சுட்டேன் .
எம்.எல்.ஏ , எம் பி சீட் கோட்ட புடிச்சுடலாம் ஆனா இந்த டவுன்பஸ்கள் ல சீட் புடிக்குறது அவ்ளோ ஈஸி இல்ல. பஸ் மூவாகுது ...... ரோடுன்னா ரோடு அப்டியொரு ரோடு .. சும்மா நாடி நரம்பெல்லாம் தெறிக்குது . தல சுத்துதுன்னு கீழ குனிஞ்சா தர சுத்துது .. அயோயோயா ... எனக்கு என்னோமா ஆகிடுச்சே ன்னு பதறி , கண்ண நல்ல தொடச்சுட்டு பாத்தா ... அது உண்மையிலே தரதான் . பஸ் சு ஓட்ட... ஓட்டைய அடச்சு வச்சுருந்த பலகை விலகிடுச்சு . அப்றேமென்ன கால நல்லா பப்பரப்பான்னு வெச்சுகிட்டே பொன்னமராவதி  போயி சேர்ந்தேன் .

அடுத்து ...என்னது அடுத்தா ? டேய் யப்பா முடியலடா ..ன்னு தோணுதா உங்களுக்கு . படிக்குரதுக்கே உங்களுக்கு இப்டி இருக்கே . எனக்கு எப்டி இருந்துருக்கும் ?

பொன்னமராவதியில் இருந்து எங்க கிராமத்துக்கு பயணம் . இந்த தடவ தனியார் டவுன் பஸ்சு . உச்சி வெயில் பன்னெண்டு மணிக்கு பஸ்ல ஏறி ஒக்காந்தா .. உள்ள  டீ வி ல படம் ஓடிட்டு இருக்கு . என்ன படம் தெரியுமா ? வேட்ட ..வேட்ட ..வேட்டைகாரன் ... ! ஏம்  உச்சி  மண்டையில சுர்ருங்குது ..... ! நானெல்லாம் போன ஜென்மத்துல எதோ பாவம் பண்ணிருக்கேன் .

மணி மத்தியானம் ஒன்னு . கிட்டதிட்ட பதினெட்டு மணி நேர பயணம் முடிவுக்கு வந்தது .
வீட்டுக்கு போனா எங்க அம்மா கேக்குது, என்னடா பிளைட்லையா வந்த ? இவ்ளோ வெரசா வந்துட்ட. கடுப்புல துடுப்பு போடாம சும்மா இரும்மா ன்னு எரிஞ்சு விழுந்து, உள்ள போயி சரிஞ்சு விழுந்தேன் .



பி.கு : ரெம்ப நாளா ஒரு ஆச இருந்துச்சு , சென்னை ல இருந்து எங்க கிராமத்துக்கு டவுன் பஸ்லே போகணும்னு  ( கிட்டத்தட்ட  நானூத்தி  சொச்சம் கிலோமீட்டரு ). நல்ல வேளை அது நடக்கல . ஒருவேள அதுமட்டும் நடந்த்ருந்தது , சென்னையில டவுன்பஸ் ல  ஏறுன என்ன , எங்க ஊர்ல ஆம்புலன்சுலருந்துதான் ஏறக்கிருப்பாய்ங்க .

வர வர ஊருக்கு போறது போருக்கு போற மாதிரி ஆகிடுச்சு .....!

5 comments:

  1. //
    இந்த பஸ் “ஊர் சுத்தி” , “மல சுத்தி” போகும் பரவாயில்லியா .....?
    வேண்டாங்க எனக்கு “தல சுத்தி போகும்னு” ஏறுன வேகத்துல எறங்கிட்டேன் .
    //

    ரொம்பவே ரசித்தேன்..

    டெம்பிளேட், எழுத்துருவில் கவனம் செலுத்துங்க பாஸ்.. கொஞ்சம் குஷ்டமா இருக்கு

    ReplyDelete
  2. ஹா... ஹா... அப்படி சிரிக்க முடியவில்லை... இருந்தாலும் 'பய'ணம் மறக்க முடியாதது...

    ReplyDelete
  3. //ங்கொய்யால நாப்பது கிலோமீட்டர் வேகத்துல, தகர டப்பாவா உருட்டி விட்ட மாதிரி போறதெல்லாம் எக்ஸ்ப்ரஸ் வண்டியா ..?// ஹா ஹா ஹா

    /ட பதினெட்டு மணி நேர பயணம் முடிவுக்கு வந்தது .// எப்பா சாமி சத்தியமா முடியல

    //ரெம்ப நாளா ஒரு ஆச இருந்துச்சு , சென்னை ல இருந்து எங்க கிராமத்துக்கு டவுன் பஸ்லே போகணும்னு// ஏன்யா யோவ் ஏன்யா இப்டி ...

    ReplyDelete
  4. ஸ்... அப்பா படிக்கிற எங்களுக்கே இப்படி இருக்குன்னா அனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும்?

    //ஜீன்சும் டீ சர்ட்டும் போட்ட பிச்சைகாரன் மாதிரி நின்னுட்டு இருந்தேன் //

    :)

    ReplyDelete
  5. பஸ் பயணம் ரசித்தேன்! கஷ்டத்தையும் நகைச்சுவையாய் பகிர்ந்த உங்கள் எழுத்து நடை சிறப்பு! நன்றி!

    ReplyDelete

Related Posts with Thumbnails